கீழக்கரை நூரானியா பள்ளி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்திய “உணவு திருவிழா”..

75வது சுதந்திர தினத்தன்று நூரானியா நர்சரி பிரைமரி ஸ்கூல்  பெற்றோர்களுக்கான கீழக்கரை பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு பள்ளி நிர்வாகிகளுடன்  நடுவராக ராவியத் ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும்  KEEGGI யின் அலுவலக மேலாளர் மைதின் பாட்ஷா ஆகியோர் சிறந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக நடுவர்கள் நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திர தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் இந்நிகழ்வை பள்ளி நிர்வாகிகளின் ஒருவரான ஜுபைர் சிறப்பாக ஒருங்கினணத்திருந்தார்.