தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் 75வது சுதந்திர தின விழா.

மதுரை பொன்மேனி அலுவலகத்தில் மிக மிகக் இந்திய திருநாட்டில் 75வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சங்கபொது செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், ஜி.செந்தில் ராஜன், அப்பா பாலாஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தேமுதிக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர். செல்வகுமார் கலந்து கொண்டு கொடியேற்றினார். விழாவில் தேமுதிக மதுரை வடக்குஇணை செயலாளர் வகிதா ஜாஸ்மின், சின்னச்சாமி, மணி, வழக்கறிஞர் பிரபாகரன், தலைவர் அப்துல் ஜாபர், துணைச்செயலாளர் மதுர பாலா, சுகுமார், அமீர். ஆண்டிப்பட்டி தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவை சங்க அலுவலக மேலாளர் பாலா, ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன் ஏற்பாடு செய்தார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்