Home செய்திகள் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பழ.சுப்ரமணியம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பழ.சுப்ரமணியம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

by mohan

75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனீஷ் சேகர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பழ.சுப்ரமணியம் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசி பெற்றார்.இதற்கு முன்னதாக சுதந்திர போராட்ட தியாகி பழ.சுப்ரமணியம் தனது வீட்டு வாசலிலேயே தேசியக்கொடி ஏற்றி அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது சுதந்திர தின நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தனது இல்லத்திற்கு வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருநீறு இட்டு தனது ஆசிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.(2)திருப்பரங்குன்றத்தில் கையில் ஏந்தி அனுமன் சேனா சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பாரதமாதா வேடமணிந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தேசிய கொடி ஏற்றினர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் சாமி சன்னதியில் இருந்து பேருந்து நிலையம் வரை அகில பாரத அனுமன் சேனா சார்பில் மண்டல செயலாளர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பாரதமாதா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் முன்னதாக போலீசார் ஊர்வலமாக செல்ல தடை விதித்தனர் பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின் அகில பாரத அனுமன் சேனா மாநில முதன்மை செயலாளர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகளை தேசியக்கொடி ஏற்ற அனுமதி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..(3)75வது சுதந்திர தின விழா தினத்தன்று திருப்பரங்குன்றம் அருகே கைத்தறி நகரில் புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் திறந்து வைத்தார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் கைத்தறி நகரில் இன்று புதிதாக கட்டப்பட்ட ஆஸ்டின்பட்டி புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.நிலையூர் கைத்தறி நகரில் பல குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன இதனை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனார்.இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பசும்பொன் பாண்டியன் முயற்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் உதவியுடன் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து புறக் காவல் நிலையத்திற்கு கட்டிடத்தை வழங்கி அதனை சிறப்பாக செயல்படுத்தி 75வது சுதந்திர தினவிழா அன்று திறந்து வைத்தனர்.புறக் காவல் நிலையத்தை திறந்துவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் கூறுகையில் பொதுமக்கள் அனைவரும் வீடுதோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இதன் மூலம் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவியாக அமைவதால் குற்றச் சம்பவங்கள் குறையக்கூடும் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!