சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊனமுற்றவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு ரூ 20 லட்சம் மதிப்பில் பரிசுப் பொருட்கள் நன்கொடை வ ழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று லையன்ஸ் கிளப் தலைவராக திரு சிவமணி அவர்கள் பொறுப்பேற்றார் இதில் சமூக ஆர்வலர்கள் ஈஸ்வரமூர்த்தி வைரச்செழியன் சிவ பாண்டி நிரஞ்சன் ஜெராக்ஸ் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் முக்கிய சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் . கனவனை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் பள்ளிகளுக்கு பிரோ. சீருடைகள். ஆன்லைன் வகுப்பு நடைபெறும் சூழல் நலன் கருதி மாணவர்களுக்கு செல்போன், மற்றும் ஏழை குடும்பத்தாருக்கு அரிசி 5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள், மேலும் சிற்ந்த பள்ளி ஆசிரியர்களை உக்குவிக்கும் வகையில் கேடயம் வழங்கி இவ்விழா நடைபெற்றது .ஏழை எளியோர் ஏராளமானோர் பங்கேற்று மகிழ்ச்சியுடன் நலத்திட்ட உதவிகளை வாங்கி சென்றனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் அடித்தட்டு மக்கள் வாழ்கின்றனர். சாதனையாளர்கள் உள்ளனர். இதுபோல் சமூக ஆர்வலர்கள் தானாக முன் வந்து நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு லயன்ஸ் கிளப் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..