
75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் விமானநிலையை இயக்குனர் பாபு ராஜ் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக விழாவை கொண்டாடினர். இந்த சுதந்திர தின விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமென்டர் உமாமகேஸ்வரன் மற்றும் உதவி கமாண்டர் சனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சுதந்திர தினவிழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான நிலைய பாதுகாவலர்கள், விமான நிலைய தீயணைப்பு துறையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் தங்களது குடும்பங்களுடன் கலந்துகொண்டனர். இதே போல் மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்திலும் பாதுகாப்பு படை துணை கமென்டர் உமாமகேஸ்வரன் தலைமையில் தேசிய கொடியேற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.