Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பு..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பு..

by mohan

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வாய்ப்பு..தென்காசி மாட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 11, மருந்தாளுனர்கள், 11, ஆய்வக நுட்புனர்கள் மற்றும் 11,நுண்கதிர் வீச்சாளர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்காக அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தனியார் கல்லூரிகளில் படித்த கல்விச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.1. ஃபார்மசிஸ்ட் பணிக்கு கல்வித்தகுதி Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.2. லேப் டெக்னீசியன் கிரேடு 2 பணிக்கு கல்வித்தகுதி King institute of Preventive அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இரண்டு வருட ஆய்வக நுட்புணர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.3. ரேடியோகிராஃபர் பணிக்கு கல்வித்தகுதி அரசு நடத்தும் கல்வி நிலையத்தில் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இரண்டு வருட Diploma course in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும். மேலும் இதற்கான விண்ணப்ப படிவங்கள் தென்காசி, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் 09.08.2021 முதல் காலை 11.00 to 5.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 17.08.2021 மாலை 5.00 மணிக்குள் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம், தென்காசி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்களுக்கு 24.08.2021 அன்று காலை 10.00 மணிக்கு தென்காசி, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் வைத்து நேர்முகத் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!