நெல்லையில் மனித சங்கிலி போராட்டம்..

கூடங்குளம் ராதாபுரம் இருக்கன்துறை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகளை மூட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் , விவசாய சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் , கொரோனா கால நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும் , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் , பெட்ரோல் , டீசல், கேஸ் விலையை கட்டுப்படுத்த வேண்டும் , கூடங்குளம் பகுதிகளில் இயங்கும் கல்குவரிகளை ,மூட வேண்டும் போன்ற 17 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..