புளியங்குடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்; எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..

புளியங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கூட்டம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரத் தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் இம்ரான் கான் கலந்து கொண்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்திற்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கட்சியை இன்னும் வலுவாக்குவது குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வில் துணைத் தலைவர் ஜார்ஜ், துணைச் செயலாளர் அகமது,பொருளாளர் நஸீர், நகரச் செயற்குழு உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன், மேற்கு கிளைத் தலைவர் ஷேக் முகம்மது, துணைச் செயலாளர் திவான் ஒலி, கிழக்கு கிளைத் தலைவர் நவாஸ் கான், துணைத் தலைவர் சதாம் உசேன்,துணைச் செயலாளர் அப்துல் ரஹீம்,தெற்குக் கிளைத் தலைவர் டேவிட், செயலாளர் மணி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புளியங்குடி பகுதியில் சாலை போடப்படாத தெருக்களுக்கு உடனடியாக சாலைகள் அமைத்து தர வேண்டும், இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் தங்களின் மருத்துவத் தேவைக்கு தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதியில் உள்ள மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையை மாற்றி புளியங்குடி அரசு மருத்துவமனையின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வருகின்ற 2021 உள்ளாட்சித் தேர்தலில் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட அதிகமான வார்டுகளில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நகரச் செயலாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்