கலசப்பாக்கம் அருகே மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சான்பாஷா தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பிலும் மற்றும் கியூரி இல்லம் இணைந்து நடத்தும் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாம் கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் மருந்தாளர் சரவணன் செவிலியர்கள் மீனா கற்பகவல்லி சென்னம்மாள் பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இம்முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளி நல சங்கத்தின் அலுவலர் ஜோதிலிங்கம் உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் துணை உதவி அலுவலர் முனுசாமி மற்றும் கியூரி அமைப்பின் நிறுவனர், தலைவர் தாமஸ் செயலாளர் சேவியர் பங்கேற்று பொதுமக்களிடம் ஆலோசனைகளை வழங்கினார் அப்போது அவர் கூறுகையில் ; மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது மூன்றாம் அலையில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி அணியவேண்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக நடக்க முடியாமலும் வீட்டில் இருப்பவர்களை வீட்டிற்கே வந்து தடுப்பூசி செலுத்தவார்கள் மருத்துவ குழுவினர் மருத்துவர் அலுவலர் தேன்மொழி கூறுகையில் கர்ப்பிணி தாய்மார்கள் பாலூட்டும் தாய்மார்களும் மாற்றுத்திறனாளிகளும் எவ்வித அச்சமும் இன்றி ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் இருந்தால் அவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்த மருத்துவ குழுவினர் ஆகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இதுவரை வீரளூர் கிராமத்தில் 800 நபர்களுக்கும், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் தாமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..