நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் சைக்கிளில் மோதி பலி .

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி,  எ.ஆவாரம்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் வயது 18, பிச்சை மகன் பாண்டி வயது 22, நிலக்கோட்டையில் உள்ள தனியார் கம்பெனி கூலி வேலை செய்து வருகிறார்கள். இருவரும் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வேலையை முடித்து விட்டு தனது ஊருக்கு நிலக்கோட்டையில் இருந்து  எ.ஆவாரம்பட்டி நோக்கி மதுரை ரோட்டில்  தங்களது ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேர்களும் கரியாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அப்பகுதியில் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டு என்பதால் எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி  வீசி எறியப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேர்கள் உடலையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டது. இதை அறிந்த எ.ஆவாரம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை அரசு மருந்து வமனைக்கு வந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் வண்டியை கையால் ஆத்திரத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் 2 பேர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. விபத்தில் இறந்து போன பாண்டி என்பவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

உதவிக்கரம் நீட்டுங்கள்..