காஞ்சி லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ரிணமோசன லிங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு வழிபாடு கள் அருள்வாக்கு செம்மல் முல்லை அம்மா தலைமையில்கொரோனா வைரஸ் முடிந்து பள்ளிகள்திறக்க, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும்இக்கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு மனமுருக அம்பாள் பிரார்த்தித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆடை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடைபெற்றது. 10க்கும் மேற்பட்டோர் தீச்சட்டி ஏந்தி வழிபட்டனர் பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அருணகிரி, கோயில் ஊழியர்கள் கிராமப்புற பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்