Home செய்திகள் செங்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுமென செங்கம் பேரூராட்சிக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுமென செங்கம் பேரூராட்சிக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மில்லத் நகர் வரை செல்லக்கூடிய பஜார் வீதியில் தினம்தோறும் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஒட்டிகளுக்கு இடையூராகவும் விபத்துகள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்து வருவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்இது சம்பந்தமாக பல முறை செங்கம் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து திருவண்ணாமலையில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாடுகளால், வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலைமை ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மேலும்மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் செங்கம் பகுதி பொது மக்களும் வாகன ஓட்டிகளும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com