முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ரவுல் பியேர் பிக்டே நினைவு தினம் இன்று (ஜுலை 27, 1929).

ரவுல் பியேர் பிக்டே (Raoul Pierre Pictetet) ஏப்ரல் 4, 1846ல் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் பிறந்தார். ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன. டிசம்பர் 22,1877ல் பாரிசில் உள்ள அறிவியல் கழகத்திற்கு ஜெனீவாவில் இருந்து பிக்டே அனுப்பியிருந்த ஒரு தந்தியில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்தது. சல்பூரசு மற்றும் கார்போனிக் காடிகளைப் பயன்படுத்தி 320 வளிமண்டல அழுத்தத்திலும், 140 பாகை குளிரிலும் இன்று ஆக்சிசன் திரவமாக்கப்பட்டது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட அதே காலகட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த லூயி பால் காயில்டேட் என்பவர் முற்றிலும் வேறான முறையொன்றில் ஆக்சிசனைத் திரவமாக்கியிருந்தார். இவரே முதன் முறையாக நைட்ரஜனை வெற்றிகரமாகத் திரவமாக்கியவர்.

திரவ நைட்ரஜன் (liquid nitrogen) என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன் ஆகும். இது ஒரு நிறமற்ற தெளிவான திரவம் ஆகும். இதன் கொதிநிலையில் (−195.79 °C ) அடர்த்தி 0.807 கி/மிலி ஆகும். தொழில்முறையில் இது திரவக் காற்றை பகுதிபடக் காய்ச்சி வடித்தலின் மூலம் உருவாக்கப்படுகிறது. திரவ நைட்ரஜன் பொதுவாக LN2, “LIN” அல்லது “LN” ஆகிய சுருக்கக் குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது. திரவ நைதரசன் ஒரு ஈரணுத் திரவம் ஆகும். அதாவது திரவமாக்கலின் போது N2 வளிமத்தின் N சகப் பிணைப்பின் ஈரணு இயல்பு மாற்றமடையாமல் இருக்கும்.

எரிபொருள் வழங்கும் நிலையங்களில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு டயர்களில் காற்றுக்கு பதிலாக நைட்ரஜன் வாயுவை நிரப்பும் பணியை ஆரம்பிதுள்ளது. நைட்ரஜன் வாயுவை நிரப்புவதால் வாகனங்களின் மைலேட்ஜ் கூடுதலாக கிடைக் கும்.டயர்களை குறைந்த வெப்பநிலையில் இருக்கச்செய்யும். டயர்களின் ஆயுட்காலம் கூடும். அடிகடி டயர்களின் காற்றழுத்தை சோதிக்க தேவையில்லை. முதன் முறையாக நைட்ரஜனை (Nitrogen) திரவமாக்கிய ரவுல் பியேர் பிக்டே ஜூலை 27, 1929ல் தனது 83வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.