
அப்துல் கலாம் ஆறாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் இன்று இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் மக்கள் பாதை இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா , மக்கள் பாதை நூருல் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மக்கள் பாதை நூருல் அமீன் கூறுகையில், அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் மக்கள் பாதை சார்பாக கடந்த ஐந்தாண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளை முன்னெடுத்திருக்கிறோம்.மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தி ஊக்கப்படுத்தி இருக்கிறோம் என்றார்.
You must be logged in to post a comment.