Home செய்திகள் செங்கம் பகுதியில் கொட்டப்படும் அழுகிய காய், கனிகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம் – அச்சத்தில் பொதுமக்கள்.

செங்கம் பகுதியில் கொட்டப்படும் அழுகிய காய், கனிகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம் – அச்சத்தில் பொதுமக்கள்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – போளூர் சாலையில் பழைய காவல் நிலைய பகுதியில் பல்வேறு காய் கனி வியாபாரிகள் கொட்டப்படும் அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. இவற்றை ஆடு, மாடு பன்றிகள் தின்று சிதைத்து விடுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று நோய் பரவும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில், இது போன்று அழுகிய கொட்டப்படும் காய்கறிகளால் மற்றும் அழுகிய வெங்காயங்களால் வேகமாக நோய் பரவும் அபாய சூழ்நிலையில் உள்ளது மேலும் கிருஷ்ணாபுரம் சாலையோர பகுதி மற்றும் மில்லத் நகர் சாலையோர பகுதியில் அழகிய காய்கறிகள்., அழகிய வெங்காயத்தால் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நீண்ட நாட்களாக இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் சூழ்நிலையும் உள்ளது.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் கண்காணித்து அழுகிய காய்கறிகள் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்றும், பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்திருப்பதால் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com