Home செய்திகள் ஜவ்வாது கிராமத்தில் மினி கிளினிக் அமைக்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருவதால் மலைவாழ் மக்கள் ஆத்திரம்

ஜவ்வாது கிராமத்தில் மினி கிளினிக் அமைக்க ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருவதால் மலைவாழ் மக்கள் ஆத்திரம்

by mohan

தமிழ்நாடு முழுக்க 2000 மினி கிளினிக் அமைக்க தமிழக அரசுஉத்தரவிட்டு செயல்பட்டு துவங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் 75 மினி கிளிக் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இதில் குறிப்பாக ஜவ்வாது மலை அடிவார கிராமமான கிளையூர் கிராமத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கிராமத்தில் மட்டும் சுமார் 1500 மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தை கடந்து ஊர் கவுண்டனூர் ஊராட்சியில் சுமார் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தை சுற்றி சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிக்காக 30 கிலோ மீட்டரில் உள்ள செங்கம் 25கிலோமீட்டர் தூரம் உள்ள பரமனந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். அதைவிட்டால் தனியார் மருத்துவர்களை நாட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அத்துடன் போலி மருத்துவர்கள் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது. சில நேரங்களில்கிளையூர் கிராமத்தை சுற்றியுள்ளமலை கிராமங்களில் இருந்தும் டோலி கட்டி நோயாளிகளை அழைத்து பரமனந்தல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. எனவே எல்லா கிராமத்திற்கும் மையமாக உள்ள கிளையூர் கிராமத்தில் மினி கிளினிக் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கிராமத்தில் அமைப்பதற்கான தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இங்குள்ள சமுதாயக்கூடம் அல்லது இங்குள்ள பஸ் நிலையம் அருகில் உள்ளபஞ்சாயத்து கட்டிடம் இரண்டும் நல்ல நிலையில் உள்ளது. இதில் அமைக்க வேண்டுமென கடந்த 2 வாரமாக வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் அவர்களும்சுகாதார பணியாளர்களும், பொதுமக்களும் முயற்சி எடுத்து வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம்கட்டடத்திற்குள் இருக்கவேண்டிய சிறுசிறு அடிப்படை வசதிகளை செய்து தருவதில்ஒத்துழைப்பு அளிக்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது அரசு எங்களுக்கு மினி கிளினிக் துவங்க ஆணையிட்டும் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையளிக்கின்றது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கிராமத்திற்கும மையமாக உள்ள கிளையூர் கிராமத்தில் உடனடியாக அம்மா மினி கிளினிக் அமைக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!