
- அதிமுகவினர் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மகரிஷி மனோகரன் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்த கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற சுமார் 16.43 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன் ரூ.12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்ததை கொண்டாடும் விதமாக செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.அதனை தொடர்ந்து செங்கம் பஜார் வீதி போளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர் இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் ஆனந்தன் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மா முனிக்கண்ணு விவசாய பிரிவு ஒன்றிய கழக செயலாளர் ராஜி கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கர் வழக்கறிஞர் தினகரன் வழக்கறிஞர் செல்வம் தனஞ்செழியன் சிவாஜி குப்பநத்தம் வாசு கிருஷ்ணமூர்த்தி காயம்பட்டு ரவி முன்னாள் கவுன்சிலர் சுந்தர் தொழிநுட்ப நகர செயலாளர் ராஜேஷ் இணைச் செயலாளர் அமுல்அரசன் இளைஞர் பாசறை செல்லா தொழிநுட்ப நகர பொருளாளர் மகேஸ்வரி பசறை செயளாலர் அரவிந்த் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதேபோல்,ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.சி.அசோக் தலைமையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ் 12110 கோடி விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கிளையூர் கிராமத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
You must be logged in to post a comment.