ஜூனியர் ரெட் கிராஸ், போக்குவரத்து காவல் துறை சார்பில்ராமநாதபுரத்தில்சாலைப் பாதுகாப்பு கருத்தரங்கம்

சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்யமூர்த்தி சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம். ரமேஷ் வரவேற்றார். கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு ரெட் கிராஸ் சார்பில் முகக் கவசம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்விற்கு ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் ஜி. முத்துசாமி முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் பசுமை ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஏ. மலைக்கண்ணன் பள்ளியின் தலைமை ஆசிரியர் எச். ஹாஜா முகைதீன் ஆகியோர் சாலைப் பாதுகாப்பு பற்றிய செய்திகளை விவரித்தனர்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ.கே. சிவா மற்றும் அவரது குழுவினர் மாணவர்களிடம் சாலைப் பாதுகாப்பு பற்றியும், அறிவிப்பு, எச்சரிக்கை மற்றும் உத்தரவு ஆகிய சின்னங்களின் முக்கியத்துவம் பற்றியும் சாலை விதிகளை மீறு பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் பற்றியும் விவரித்தார்.முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்யமூர்த்தி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லா பயணம் ஆபத்தானது என்பது பற்றியும் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகளை பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பெற்றோர்களிடம் வலியுறுத்துவது மற்றும் மனித நேயம் பற்றியும் விவரித்தார்.ரெட் கிராஸ் பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். பள்ளி துணை ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, ராஜா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் வி.எஸ். ரமேஷ் பாபு, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் எம். முகமது தாசின் ஜே.ஆர்.சி. கவுன்சலர் ஆர். ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்