Home செய்திகள் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு அலுவலர்கள் ஆய்வு

கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பு குறித்து மத்திய குழு அலுவலர்கள் ஆய்வு

by mohan

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்துமத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4 பேர் கொண்ட மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள்பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள்.தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்பயிர்கள் சேதமடைந்தன. இராமநாதபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாத சராசரி மழையளவு 48.50 மி.மீஆகும். நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் 248.74 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இதன்காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்துதமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, விவசாயிகள் பாதிக்கப்படாதவகையில் உரிய நிவாரணம் வழங்க ஏதுவாக ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக கிராமங்களில்வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் பாதிப்பு குறித்துகணக்கெடுக்கும் விரிவான கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டத்தில் 79,210 ஹெக்டர் நெற்பயிர்களும், 4059 ஹெக்டர் சிறுதானிய பயிர்களும், 3030 ஹெக்டர் பயிறு வகைகளும், 1297 எண்ணெய் வித்து பயிர்களும் என87,596 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பல்வேறு பயிர்கள் சேதமடைந்துள்ளதாககணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர்பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்திட மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4 பேர் கொண்டமத்திய ஆய்வு குழு வருகை தந்துள்ளனர்.இக்குழுவில் மத்திய அரசின் மூலம் மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர்அசுடோஷ் அக்னி ஹோத்ரி, மத்திய வேளாண்மை துறை அமைச்சக இயக்குநர் டாக்டர் மனோகரன், மத்திய நிதித்துறை துணை இயக்குநர்மகேஷ் குமார் மத்திய ஊரகவளர்ச்சித்துறையை சார்ந்த சின்னசாமி ஆகியோர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி மற்றும் ராமநாதபுரம்ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி கிராமங்களில் பாதிப்படைந்துள்ள நெற் பயிர்களையும்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ஆலங்குளம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தாளியரேந்தல்கிராமங்களில் பாதிப்படைந்துள்ள மிளகாய் பயிர்களையும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம்கருங்குடி மற்றும் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கற்காத்தகுடி கிராமங்களில் பாதிப்படைந்துள்ளநெற் பயிர்களையும் ஆய்வு செய்து, பயிர் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம்கேட்டறிந்தனர்.தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன், மாவட்டஆட்சித் தலைவர் (பொ), மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி ஆகியோர்உடனிருந்தனர்.இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா,வேளாண்மை துறை இணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.தனுஷ்கோடி உட்பட வேளாண் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!