Home செய்திகள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம்அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம்அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாரத்தில் கண்ணகுருக்கை மற்றும் கரியமங்கலம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.மேலும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து பார்வையிட்டு கர்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது;அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது;தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் மற்றும் துணை முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது இதற்கு காரணம் தமிழக சுகாதார கட்டமைப்பு மிகவும் பலமாக இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லாத ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்த பகுதிகளில் சிகிச்சை பெறக் கூடிய அளவிற்கு மாநிலம் முழுவதும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் 2,000 இடங்களில் அம்மா எனக்கு பிரியாணி 14ஆம் தேதி சென்னையில் முதல்வர் துவக்கி வைத்தார். இதன்படி, திருவண்ணாமலை மாவட்ட சுகாதார மாவட்டங்களில் 73 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்படுகிறது.கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை பிரசவத்துக்கு பரிசோதனை செய்து பரிந்துரை செய்தல் , சளி இருமல் காய்ச்சல் மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் உடனடி தடுப்பூசியும் வழங்கப்படும். என்று அவர் பேசினார்.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆவின் பெருந்தலைவர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ,துணை இயக்குனர் மீரா துணை ஆட்சியர் ஸ்ரீதேவி முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மகரிஷி பள்ளி தாளாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கே.கே.மணி, நகர அம்மா பேரவை செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ட்பட பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!