Home செய்திகள் கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை வீணாக உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை

கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை வீணாக உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை

by mohan

திண்டுக்கல் மாவட்டம் , கே. சி. பட்டி , ஆடலூர் , பன்றிமலை உள்ளிட்ட தென் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆத்தூர் தாலுகாவில் உள்ள போடியகாமன் வாடி , நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய் நிரம்பி அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள செங்கட்டாம்பட்டி கண்மாய் நிரம்பி தற்போது நிலக்கோட்டை கொங்கர் குளம் கண்மாய்க்கும், சீத்தாபுரம் கண்மாய்க்கும் தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் சீத்தாபுரம் கண்மாய்க்கு செல்லும் தண்ணீரை மர்ம நபர்கள் உடைத்து தண்ணீரை வீணாக வயல் வெளிகளில் உடைத்து விட்டதாக கோரி நிலக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய் பாசனம் விவசாயிகள் நேரில் வந்து முற்றுகையிட்டனர். இதனை அறிந்த நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீதிபதி விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நீதிபதி பேசியதாவது:தற்போது நல்ல மழை பொழிவு இருக்கிறது வரும் காலங்களிலும் அதிகமாக மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து வருகிறது. எனவே அனைத்து கண்மாய்களில் தண்ணீரை நிரப்ப அரசு தரப்பில் பொதுப்பணி நிர்வாகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக விவசாயிகள் அனைவரும் எந்தசூழ்நிலையிலும் தன்னிச்சையாக செயல்பட்டு இடையூறு ஏற்படுத்தினால் அரசு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் , ஒன்றிய கவுன்சிலர் கணேசன் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிலக்கோடடை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com