சேக்கிழார் மன்ற நூல் வெளியீட்டு விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சேக்கிழார் மன்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் மன்ற அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு அகில பாரத சன்யாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்த மகராஜ் தலைமை வகித்தார்.சேக்கிழார் மன்ற தலைவர் பேராசிரியர் பூமிநாதன் எழுதிய ‘விட்டு விடுதலை ஆகிவிடு’ என்ற நூலை தூத்துக்குடி சைவநெறி இதழாசிரியர் காந்தி வெளியிட ராஜபாளையம் வட்டாட்சியர் சரஸ்வதி கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். முன்னதாக மன்ற செயலாளர் கல்யாண வெங்கட்ராமன் வரவேற்றார். மன்றத் தலைவர் பூமிநாதன் பேசியதாவது: ஜீவன் முக்தி பெற்ற எனது மனைவி சுப்புலட்சுமி அம்மாளின் நினைவு நூல்.இந்நூல் உயிரின் வடிவம், பிறப்பு, நுண்ணுடம்பு, ஆறு ஆதாரங்கள்,பத்து வாயுக்கள், நாடிகள், மூச்சு, ஆவிகள், கூடு விட்டு கூடு பாய்தல் என விளக்கி முக்தி பெறும் அணுகுமுறையை இந்த நூல் விளக்குகிறது என பேசினார். நிறைவாக மன்ற துணை தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்