
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாரத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தில், வகுப்புகள் துவங்கி பெண்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில், ‘கற்போம் எழுதுவோம் துவக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவின்பேரில் கற்போம் எழுதுவோம் திட்ட மையங்களில் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டுவரும் மையத்தில் கற்பித்தல் வகுப்பு ஆசிரியர் பயிற்றுனர் அன்புக்கரசி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்வின் போது பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் தன்னார்வலர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.