Home செய்திகள் நெல்லையில் ஆதரவற்றவர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்த காவல் உதவி ஆணையர்…

நெல்லையில் ஆதரவற்றவர்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்த காவல் உதவி ஆணையர்…

by mohan

நெல்லை சாலையோரம் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் வசித்து வரும் யாசகர்கள்,ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களை மீட்டு, நெல்லை காவல் உதவி ஆணையர் சேகர் பத்திரமாக அரசு காப்பகத்தில் சேர்த்தார்.நெல்லை ஜங்ஷன் பகுதியில் அல்வா கடைகள் அருகில், இரட்டை பாலம் கீழ்புறம்,குமரகோவில், பாளையங்கோட்டை மார்கெட் பகுதி, பஸ்ஸ்டாப் கட்டடங்கள் ஆகிய இடங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து குடும்பம் நடத்தி வந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற நிலையில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.இப்பணியினை நெல்லை மாநகர காவல்துறை சார்பில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவை சேர்ந்த காவல் உதவி ஆணையர் சேகர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், தலைமை காவலர் காளி முத்து,மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நலத்துறை களப்பணியாளர்கள், ஒன் ஸ்டெப் சென்டர் பொன்முத்து,மகிளா சக்தி கேந்திரா தங்கமாரி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com