திருவண்ணாமலையில் திரி சாரண-சாரணியம் தொடக்க விழா

  • திரைப்பட நடிகர் பங்கேற்பு

திருவண்ணாமலை ஆல்பா மறுவாழ்வு மையத்தில் பாரத சாரணர் இயக்கம் சார்பில் திரி சாரண சாரணியம் தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு தி.மலை மண்டல ஒருங்கிணைப்பாளர் , மாவட்ட செயலாளருமான பியூலா கரோலின் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட திரி சாரண பயிற்சி ஆனையர் சுதாகர் அனைவரும் வரவேற்று பேசினார்.தேசிய , மாநில திரி சாரண பயிற்றுனர் ஜெயினுலாப்தின் மற்றும் ஆனந்த் காணெலி வழியாக திரிசாரணனின் செயல்பாடுகள் குறித்து சிறப்பாக விளக்கமளித்தார். நிகழ்ச்சியின் முன்னதாக சாரணி பிராத்தனை பாடல், சாரண சாரணி உறுதி மொழி, அறிமுக விளையாட்டு நடைபெற்றது தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் ஐவர் பட கதாநாயகன் பேரரசு கலந்துகொண்டு சாரண மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் பேசும்போது: இந்திய அளவில் பாரத சாரண இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளிப்பருவத்தில் நானும் ஒரு சாரண மாணவன். சமுதாயப் பணி மக்களுக்கு சேவை பணிகளில் விடுபட பாரத சாரணர் இயக்கத்தின் மூலம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையை முன்னேற்றம் அடையலாம் என்று பேசினார்.விழாவில் போளூர், செங்கம் மாவட்ட செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, வெங்கட், மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி மற்றும் ராஜ புரஸ்கார் விருது பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ,மாவட்ட பொருளாளர் ஆல்வின் சாமுவேல் நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்