Home செய்திகள்உலக செய்திகள் தன்னம்பிக்கைக்கும்… விடா முயற்சிக்கும் அடையாளமாக கீழக்கரை இளைஞர்கள்.. ஒருவர் தொழில்முனைவோர்… மற்றவர் வழக்கறிஞர்…

தன்னம்பிக்கைக்கும்… விடா முயற்சிக்கும் அடையாளமாக கீழக்கரை இளைஞர்கள்.. ஒருவர் தொழில்முனைவோர்… மற்றவர் வழக்கறிஞர்…

by ஆசிரியர்

கனவு காணுங்கள்… வெற்றி பெறலாம்” என்ற இளைஞர்களுக்கு உற்சாக வார்த்தைகளை வழங்கிய முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமில் வார்த்தையை புதுப்பிக்கும் வண்ணமாக இன்று சாதித்து காட்டிய இளைஞர்கள்தான் TRAVEL ZONE INTL TRAVEL & TOURISM நிர்வாக இயக்குனர், மற்றொரு இளைஞர் பொறியியல் படிப்பை உதறிவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞராக உருவெடுத்து இருப்பவர்.

ஆம் கீழக்கரையை SKV Sheikh சில வருடங்களுக்கு முன்பு வேலை தேடுபவர்களுக்கு உதவும் வண்ணம் வேலை வாய்ப்பு செய்திகளை சமூக வலைதளங்களில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த பொழுதே தன்னார்வத்துடன் செய்து வந்தார்.  பின்னர் இந்தியாவில் இருந்து வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் நபர்களுக்கு விமான சேவை டிக்கெட், விசா சம்பந்தப்பட்ட விசயங்களை எளிதாக்கும் வண்ணம் சிறிய தொழில் நிறுவனத்தை தொடங்கினார். அச்சமயத்தில் உற்சாகப்படுத்தியவர்களை விட ஊனப்படுத்தியவர்களே அதிகம் என கூறலாம்.  அதெற்கெல்லாம் பதில் கூறும் வகையில் பல சாதனை விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக 01/01/2021 அன்று துபாயில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் TRAVEL ZONE INTL TRAVEL & TOURISM என்ற முறையான அரசு அனுமதியுடன்  தொடங்குகிறார்.  இவர் முயற்சி வெற்றியடைய நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.

அடுத்தவர் வழக்கறிஞர், “சட்டமே எனது இலட்சியம்” எனும் சிறப்பான முனைப்போடு, சட்டம் பயின்று, வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள ஜாஹித் ரிபாய் கீழக்கரை சிங்கப்பூர் டிராவல்ஸ் ஸ்தாபகர், ஜகுபர் அலி காக்கா மகனார் ஆவார். இவர் இன்னும் பல மைல் கற்களை தொட வாழ்த்துவோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!