Home செய்திகள் பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி துவக்கம்..

பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி துவக்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.9- இராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தில் விதைகள் தூவும் பணி தொடக்க விழா இன்று நடந்தது. உச்சிப்புளியில் உள்ள  இந்திய கடற்படை ஐஎன்எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம்  விதைகள் தூவும் பணியை இந்திய கடற்படை தமிழ்நாடு, புதுச்சேரி சரக கமாண்டர் ரவிக்குமார் டிங்ரா தொடங்கி வைத்தார்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் ராமேஸ்வரம் பகுதிக்கு உட்பட்ட வனத்துறை பராமரிப்பில் உள்ள பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் அடர்த்தி குறைந்த காடுகளில் பசுமையாக்கிடும் வகையில் மாவட்டத்தின் பூர்வீக மர விதைகள் வேம்பு, புளி, நாவல், புங்கன் என 5 லட்சம் விதைகள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்படுகிறது. வனத்துறை மூலம் கண்டறியப்பட்ட இதர பகுதிகளில் மழைக்காலம் துவங்கியதும்  விதைகள் தூவப்பட்டு மரங்கள் வளர்க்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.  மாதா அமிர்தானந்தமாயி நிர்வாக அலுவலர் சுவாமி ராமகிருஷ்ணா புரி, மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு உட்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!