Home செய்திகள் முத்துராமலிங்கத்தேவர் அய்யாவை சின்ன வட்டத்துக்குள் அடைக்க கூடாது.-அண்ணாமலை

முத்துராமலிங்கத்தேவர் அய்யாவை சின்ன வட்டத்துக்குள் அடைக்க கூடாது.-அண்ணாமலை

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயலரை எதிர்த்து துப்பாக்கூூட்டில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் நினைவிடத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின் நினைவிடத்தில் அவரின் நினைவாக மரக்கன்று நட்டு வைத்தார்.பெருங்காமநல்லூர் தியாகிகள் சங்கத்தின் சார்பில் அண்ணாமலைக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கிய காலத்தில் அவர்களை வீரத்துடன் எதிர்த்து போரிட்ட வீரத்தியாகிகளின் நினைவிடத்தில் என் பாதம் பட வேண்டுமென்றே இங்கே வந்தேன். தென்னிந்தியாவில் நடந்த பெரிய அளவில் பேசப்படவில்லை.மக்களுக்கு தெரியவில்லை. இவர்களின் தியாகத்தைப்பற்றி சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் எடுத்துக்கூறி நினைவிடத்தில் தேசிய சின்னம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். காலம் காலமாக நாம் பாரதம் என்றும் இந்தியா என்றும் பயன்படுத்தி வந்துள்ளோம். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் கொடுத்தது. பண்டைக்கால மக்கள் பாரதம் பாரத் என்றும் பயன்படுத்தி வந்துள்ளனர்.பண்டைய இலக்கியங்களிலிருந்து பாரதம் என்றே பயன்படுத்தப்பட்;டு வந்துள்ளது. அதனால் ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு முன் பாரத் என வைக்கப்பட்டத்தில் தவறில்லை. முத்துராமலிங்கத்தேவர் அய்யாவை சின்ன வட்டத்துக்குள் அடைக்க கூடாது.அவர் ஒரு தேசியச்தலைவர். தன் சொத்துக்களையே ஏழைகளுக்கு கொடுத்தவர்.அவர் போல் யாரும் வாழ்ந்ததில்லை வாழப்போவதும் இல்லை.அவருக்கு இந்திய அளவில் பெயர் இருக்குமாறு ஏதாவது செய்ய ஆசை.மதுரை விமானநிலையத்திற்கு அவர் பெயர் வைக்க வேண்டுமென்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் அதையும் தாண்டி ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்பது என் ஆசை எனக்கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!