கீழக்கரை SDPI கட்சியினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தலைமை அரசு மருத்துவரை சந்தித்தனர்..

இன்று 04.09.2017 கீழக்கரை நகர் SDPI கட்சியின் நகர் செயலாளர்.கீழை அஸ்ரப் தலைமையில் கீழக்கரை நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனை சந்தித்து பொது மக்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்கள் கேட்கப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

முக்கிய கோரிக்கையாக இரவு நேரங்களில் மருத்துவர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்துவது, செவிலியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, அதற்கு அரசு மருத்துவர் அதற்கான கோரிக்கைகள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பிண அறைக்கு குளிரூட்டபட்ட சாதன தேவைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக வரிசையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. அதற்கு அரசு மருத்துவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போர்டு பலகை வைத்து தனி வரிசையாக செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைனோடு உள் நோயாளிகளின் வார்டுகளை SDPI நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர். இந்த சந்திப்பில்.sdpi. கட்சியின் நகர் பொருளாளர்.பைசல் மற்றும் நகர் இணை செயலாளர்.முரசலின் மற்றும் காதர் மற்றும் ரமீஸ்தீன் மற்றும் முஃபீஸ் மற்றும் ஹாதி மற்றும் மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.