பெண்களின் வாழ்வியலை மாற்றப்போகும் ORGANIC BABY நிகழ்ச்சி..

கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA சார்பாக வரும் செப்டம்பர் 8ம் தேதி ORGANIC BABY எனும் மெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி புதிதாக திருமணமான பெண்கள், குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பெண்கள், திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்க போகும் பெண்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி. பெண்களுக்காக இத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண்ணால் நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண்கள் பிரசவம் என்பது ஒரு சுகமான சுமைதான் தவிர, இன்று மருத்துவ உலகம் உருவாக்கியிருக்கும் கடினம் என்பது ஒரு மாயைதான் என்பதை உணர வைக்கும்.

இந்நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத் தெரு சமூக அமைப்பினரால் வரும் செப்டம்பர் 8ம் தேதி, *வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில்* ^மாலை 6 மணிக்கு* ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்ப்பு நிகழ்ச்சியை சகோதரி. லயான் நிஷா தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சி நீங்கள் சாதாரணமாக கேட்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி அல்ல, ஆனால் உங்கள் வாழ்கை முறையை மாற்ற எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். அனைவரும் கலந்நு கொள்ளுங்கள் மற்றவருக்கும் பகிருங்கள்.

*அனுமதி இலவசம்*