கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அறிவியல் பேரவை துவக்கம்..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அறிவியல் பேரவை 6.03.2019 துவங்கப்பட்டது,  இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார், மாணவர் அறிவியல் பேரவையின் நிறுவனர் எம.எஸ்.வாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து  இந்த கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து    மாணவர்களுக்கும் தொடர்ந்து 5 வருடங்கள் இலவசமாக பயிற்சி அளித்து பாரத நாட்டின் பண்பாளர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாக உருவாக்குவது இந்த அறிவியல் பேரவையின் நோக்கமாகும்.என்று உரையாற்றினார்.

சென்னை நினைவாற்றல் நுண்கலை  பயிற்சி மையத்தின் இயக்குனர் திருமதி ஸ்வப்னா பாபு மாணவர்களுக்கு நினைவாற்றல் பற்றிய நுட்பங்களை விளக்கி செய்து காண்பித்தார், அறிவியல் தொழிநுட்ப ஆய்வு மையத்தின் இயக்குனர் சக்திவேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி மேபல் ஜஸ்டஸ் நன்றி உரையாற்றினார், ஏராளமான பெற்றோர்களை ஆர்வமுடன்  பங்கேற்றனர்.