Home செய்திகள் வில் மெடல் உலக சாதனையில் இடம் பிடித்த கீழக்கரை மாணவர்…

வில் மெடல் உலக சாதனையில் இடம் பிடித்த கீழக்கரை மாணவர்…

by ஆசிரியர்

கீழக்கரையில் அமைந்துள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் தொழில்நுட்பவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் ஷேக் முகம்மது ரஷீத். இவர் தன் சிறுவயது முதலே வித்தியாசமான முறையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் சற்றே வித்தியாசமானது. அனைவரும் தரையில் சூழலும் மிதிவண்டி சக்கரத்தை வைத்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பொழுது இவர் மிதிவண்டி சக்கரத்தை தன் தலையில் சுழல வைத்து சாதனை படைத்துள்ளார்.

இவர் தன் தலையில் சுழல வைத்தது மட்டும் சாதனை அல்ல மிதிவண்டி சக்கரமானது சுழன்று கொண்டிருக்கும்பொழுது அதிவிரைவாக ஒரு நிமிடத்தில் 100 கடந்து படைத்தார். பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் இத்திறமையை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்ற இவர், கடந்த வருடம் MUGAVAI RECORDS & WILL STATE RECORDS ல் தன்னை சாதனையாளராகப் பதிவுசெய்து அங்கீகாரம் பெற்றுக்கொண்டார்.

தற்போது இவர் தன் முந்தைய சாதனையை முறியடிக்கும் விதத்தில் 100 படிகளை 56 நொடிகளில் கடந்து வில் மெடல்ஸ் இந்திய சாதனைப் பட்டியல் மற்றும் வில் மெடல் உலக சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றார். இந்த சாதனை முயற்சியை தன்னுடைய கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மாடிப்படிகளில் வில் குழுமங்களின் நிறுவனர் – தலைவர் கலைவாணி, முதன்மைச் செயலர் தஹ்மிதா பானு, சிறப்பு ஆலோசகர் எஸ்.கே.வி.ஷேக் ஜெய்னுலாபுத்தீன், ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரியாஸ்தீன், AEY YES Constructions ஹமீது சுல்தான் மற்றும் கல்லூரி முதல்வர் ரஜபுத்தீன், துறைத்தலைவர்கள் மாணவ மாணவியர் முன்பு செய்து காட்டினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!