கோவை ஈஷா மையத்தின் நிறுவனரான சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், மகா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவர் வினித் சூரி கூறுகையில், சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத் தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார். சூழ்நிலைகள் கடுமையாக இருந்தபோதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாகச் சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள வீடியோவில், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட்டு நலமுடன் இருப்பதாகவும், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.