Home செய்திகள் பாராளுமன்ற தேர்தல்2024: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயண விபரங்கள் மற்றும் தேதிகள் அறிவிப்பு..

பாராளுமன்ற தேர்தல்2024: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசார சுற்றுப்பயண விபரங்கள் மற்றும் தேதிகள் அறிவிப்பு..

by Askar

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை தி.மு.க. கூட்டணி தனது தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் இணைந்து எதிர்கொள்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 22-ந்தேதி முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  • 22.03.2024 (வெள்ளிக்கிழமை) – திருச்சி, பெரம்பலூர்
  • 23.03.2024 (சனிக்கிழமை) – தஞ்சை, நாகை
  • 25.03.2024 (திங்கட்கிழமை) – கன்னியாகுமரி, திருநெல்வேலி
  • 26.03.2024 (செவ்வாய்கிழமை) – தூத்துக்குடி, இராமநாதபுரம்
  • 27.03.2024 (புதன் கிழமை) – தென்காசி, விருதுநகர்
  • 29.03.2024 (வெள்ளிக் கிழமை) – தருமபுரி, கிருஷ்ணகிரி
  • 30.03.2024 (சனிக்கிழமை) – சேலம், கிருஷ்ணகிரி
  • 31.03.2024 (ஞாயிற்றுக் கிழமை) – ஈரோடு, நாமக்கல், கரூர்
  • 02.04.2024 (செவ்வாய் கிழமை) – வேலூர், அரக்கோணம்
  • 03.04.2024 (புதன் கிழமை) – திருவண்ணாமலை, ஆரணி
  • 05.04.2024 (வெள்ளிக்கிழமை) – கடலூர், விழுப்புரம்
  • 06.04.2024 (சனிக் கிழமை) – சிதம்பரம், மயிலாடுதுறை
  • 07.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) – புதுச்சேரி
  • 09.04.2024 (செவ்வாய் கிழமை) – மதுரை, சிவகங்கை
  • 10.04.2024 (புதன் கிழமை) – தேனி, திண்டுக்கல்
  • 12.04.2024 (வெள்ளிக் கிழமை) – திருப்பூர், நீலகிரி
  • 13.04.2024 (சனிக் கிழமை) – கோவை, பொள்ளாச்சி
  • 15.04.2024 (திங்கட் கிழமை) – திருவள்ளூர் வடசென்னை
  • 16.04.2024 (செவ்வாய் கிழமை) – காஞ்சிபுரம், திருபெரும்புதூர்
  • 17.04.2024 (புதன் கிழமை) – தென்சென்னை, மத்திய சென்னை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!