முகம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக வாக்காளர் தினம் மற்றும் சமூக அறிவியல் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா..

இராமநாதபுரம் முகம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக வாக்காளர் தினம் மற்றும் சமூக அறிவியல் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா பள்ளி முதல்வர் திரு.நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் தனது தலைமையுரையில் 18 வயது புர்த்தியடைந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தங்களது வாக்குக்களை பணத்தை பெற்றுக்கொண்டு வாக்களிப்பது நம் தேசத்திற்கு செய்யும் துரோகம் ஆகும் என தெரிவித்தார். மாணவர் வாக்காளர் தின சிறப்புகள் பற்றி கலைநிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தி காட்டினர். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுகளில் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து தான் அதிக மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே மாணவர்கள் தான் பள்ளியில் படிக்கும் பொழுதே திறம்பட படித்தால் பிற்காலத்திற்கு பல போட்டி தேர்வுகளுக்கு பயனள்ளதாக அமையும். மேலும் இன்றைய ஆராய்ச்சிகள் அனைத்தும் சமூக அறிவியல் பாடபிரிவுகளின் மூலமாக உருவாகிறது என தெரிவித்தார்.

மாணவர் கூட்டமைப்பு தலைவராக திரு. அகமது பர்கத் சுல்த்தான்ää துணை தலைவராக முஜிரா, செயலாளராக ரீமா துணை செயலாளராக பாத்திமா குசைன் தேர்வுசெய்யப்பட்டனர். நன்றியுரை பள்ளி மாணவி நேகா சிரிநிதா வழங்கினார்.