தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 26.01.2019 அன்று காலை 9 மணியளவில் 70 வது குடியரசு தினவிழா மற்றும் 31வது விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் ஸ்ரீமதி கேசன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விண்வெளி கிட்ஸ் சென்னை அவர்கள் மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் யோகா பலவிதமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு விழாவிற்கான ஆண்டறிக்கையை முனைவர் மலர்விழி உடற்கல்வி இயக்குநர் அவர்கள் வாசித்தார். பலதுறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக எம்.பவித்திரலெட்சுமி மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. ஓவர்ஆல் விருதினை மரியம் அணியினரும் தனிநபர் விருதினை எம்.பவித்திரலெட்சுமி மூன்றாமாண்டு வணிகவியல் துறை அணியினருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் ஜனாப் சேக் தாவூத்கான் அவர்களும் உடற்கல்வி பேராசிரியை மலர்விழிää கலா அவர்களும் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.