சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்கு தமிழக அரசின் பதக்கம்..

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழகஅரசின் சார்பில் வருடா வருடம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மாவட்ட வாரியாக வழங்கப்படுவது வழக்கம்  அதே போல இவ்வாண்டும் பதக்கம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதே போல் இவ்வாண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற   குடியரசு தினவிழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறைையினருக்கு , தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி வழங்கினார்,

அந்த வகையில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ், தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் முத்து,  சிப்காட் இன்ஸ்பெக்டர் சம்பத், எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா,  புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் கலா, அன்னத்தாய், அன்னபூரணி,
எஸ்ஐ.,கள் பாலகிருஷ்ணன், உமையொருபாகம், நம்பிராஜன், முத்துகணேஷ், சங்கர், இசக்கிராஜா, சுரேஷ்குமார், விக்டோரியா அற்புதராணி, வில்லியம் பெஞ்சமின், சோனியா, ரேவதி, மற்றும் எஸ்எஸ்ஐகள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட121 பேருக்கு  விழாவில் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் எஸ்பி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பிஆர்ஓ சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.