இரவு வேலைக்கு சென்று திரும்பியவரிடம் வழிப்பறி ஒருவர் கைது..

திண்டுக்கல் பழனி ரோடு பைபாஸ் அருகில் மேற்கு மீனாட்சி நாயக்கன் பட்டியை சேர்ந்த சத்தி என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் தனது வெல்டிங் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புக் கொண்டிருக்கும் போது   அந்த வழியாக  வந்த முத்தழகு பட்டியை சேந்த 3 நபர்கள் அவரை கத்தியால் தாக்கி விட்டு அவரிடம் இருந்த  செல்போனை  பறித்துச் சென்றனர். பறிகொடுத்த சக்தி என்பவர் சத்தமிடவே  அருகில் இருந்தவர்கள் மூவரையும்  பிடிக்க முயன்ற போது ஒருவர்  மட்டும் கையும் களவுமாக சிக்கியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தாடிக்கொம்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் திருடனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.