இராமநாதபுரத்தில் எரி பொருள் சிக்கனத்தை வலியுறுத்தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் வாக்கத்தான் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் முதுநிலை மேலாளர் வி.என். பரமேஸ்வரன், உதவி மேலாளர் சாய்நாத் ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஸ் விநியோகஸ்தர் சங்க செயலரும், வாலியா காஸ் ஏஜென்சி ஒருங்கிணைப்பாளருமான பிஆர்என் ராஜாராம் பாண்டியன் வரவேற்றார்.
சிக்கன உறுதி மொழி ஏற்கப்பட்டது. ராமநாதபுரம் செய்ய து அம்மாள் மேல்நிலைப் பள்ளி இஉதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன், தேசிய மாணவர் படை தளவாய் எஸ்.செந்தில்குமார், தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் முகமது தாசின், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், முதல்வர் முத்துக்குமார், காவல் ஆய்வாளர் தனபாலன், சார்பு ஆய்வாளர்கள் ராமநாதன், ஜெயபாண்டியன், வழக்கறிஞர் முனியசாமி, ரோட்டரியன் ஜெயக்குமார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், தேசிய பசுமைப் படை , தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய விழிப்புணர்வு நடைபயணம் சிகில் ராஜவீதி, கேணிக்கரை, வழி விடு முருகன் கோயில் , வண்டிக்காரத் தெரு வழியாக சென்று அரண்மனை வாசல் முன் நிறைவடைந்தது.
செய்தி:- முருகன்
.
You must be logged in to post a comment.