Home செய்திகள் எரிபொருள் சிக்கன நடை பேரணி: S.P. முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்..

எரிபொருள் சிக்கன நடை பேரணி: S.P. முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்..

by ஆசிரியர்

எரிபொருள் சிக்கனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Petroleum Conservation & Research Association PCRA) சார்பாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடை பேரணி மேற்கொள்ள இந்தியா முழுவதும் 200 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன அதில் தூத்துக்குடி மாநகரமும் அடங்கும்.

அதன்படி இன்று (03. 02.2019) காலை 7 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பெட்ரோலிய நிறுவன ஏஜென்சிகளின் ஊழியர்களும் இணைந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை முன்பிருந்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையம் வரை நடை பேரணி நடைபெற்றது. பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் முத்து, மத்திய பாகம் சார்பு ஆய்வாளர் சுந்தரம், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து, மற்றும் செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரி சத்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!