
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இன்று (20.10.2020) 12 பேர் உள்பட 5 ஆயிரத்து 900 பேரை இதுவரை பாதித்துள்ளது. இன்று (20/10/2020) 21 பேர் உள்பட 5 ஆயிரத்து 606 பேர் இது வரை குணமாகி வீடு திரும்பி விட்டனர். கொரோனா தொற்று பாதித்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 வயது முதியவர், 55 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகினர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
You must be logged in to post a comment.