தவறிய ஆவணங்களை ஒப்படைத்த கணவன், மனைவிக்கு கவுரவம்..

இராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் டாக்டர் வள்ளி பிரியா. பாரதி நகரில் கிளினிக் நடத்தி வரும் இவர் நேற்று (19.10.2020) இரவு தனது கிளினிக்கை முடித்து வீட்டுக்கு கிளம்பினார்.

அப்போது,  தனது மகள் ப்ரீதா வைஷ்ணவியின் பள்ளி சான்றிதகள், வெளிநாட்டு கடவுச்சீட்டு  உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய பைலை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக  கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கீழக்கரை மறவர் தெருவை சேர்ந்த வாசுகி, தனது கணவர் பாஸ்கரனுடன் இரு சக்கர வாகனத்தில் அம்மா பூங்கா  வழியாக நேற்று (19.10.2020) சென்று கொண்டிருந்தார். அப்போது, கீழே கிடந்த பைலை எடுத்து தனது  கணவரிடம் கொடுத்தார். பின்பு இருவரும் சேர்ந்து இன்று (20.10.2020) கேணிக்கரை காவல் ஆய்வாளர் பிரபுவிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தகவலறிந்த டாக்டர்  வள்ளி பிரியா மற்றும் அவரது மகள் ப்ரீதா வைஷ்ணவி ஆகியோர்  இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.  தவறவிட்ட முக்கிய சான்றிதழ் அடங்கிய பைலை வாசுகியிடம் இருந்து பெற்று கொண்டு  வாசுகி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.  கீழே கிடந்த பைலை கண்டெடுத்து உரியவரிடம்  ஒப்படைத்த வாசுகி, அவரது கணவர் பாஸ்கரனுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் இ.கார்த்திக், ஆலோசனையின் பேரில்  இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை  பொன்னாடை அணிவித்து கௌரவித்து பரிசு அளித்து பாராட்டினார்.