கள்ளக்காதல் விவகாரம்.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசையைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் முத்தழகு, 20. இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை முத்தழகு காதலித்தார் இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணுக்கும், முத்தழகுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த அப்பெண்ணின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன் முத்தழகை கண்டித்தார். ஆனாலும், கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் தந்தை முத்தழகை தீர்த்து கட்ட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாத்தக்கோன்வலசை டாஸ்மாக் கடை முன் இன்றிரவு நின்ற முத்தழகை, அப்பெண்ணின் தந்தை, அவரது மகன்கள் மற்றும் வேம்பாரைச் சேர்ந்த ஒருவர் என 4 பேரும் அரிவாளால் வெட்டியனர். இதில் படுகாயமடைந்த முத்தழகுக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக முத்தழகின் உறவினர் மாதவன் புகாரில் அப்பெண்ணின் தந்தை, அவரது மகனை உச்சிப்புளி போலீசார் கைது செய்து மேலும் இருவரை தேடி வருகின்றனர்.