Home செய்திகள் மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 111 வார்டுகள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடத்தப்படும் முகாமில் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு:இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நில அளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் ஊராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com