Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் NMMS இலவச மாதிரி தேர்வு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

தென்காசி மாவட்டத்தில் NMMS இலவச மாதிரி தேர்வு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

by syed abdulla

தென்காசி மாவட்டத்தில் NMMS இலவச மாதிரி தேர்வு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

தென்காசி மாவட்டத்தில் என்எம்எம்எஸ் ( NMMS) தேசிய திறனறி மாதிரி தேர்விற்கு பள்ளி கல்வித்துறை மற்றும் தென்காசி மாவட்ட மைய நூலகம் இணைந்து எட்டாம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவ செல்வங்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட அளவில் முதலாவது இலவச மாதிரி தேர்வு தென்காசி மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம், செங்கோட்டை, திருநெல்வேலி பல பகுதிகளை சேர்ந்த 660 பள்ளி மாணவச் செல்வங்கள் இத்தேர்வினில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த தேர்வானது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதற்கான மாதிரி தேர்வாக இருப்பதால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர் செல்வங்கள் ஆர்வமுடன் அதிக அளவில் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். தென்காசி மாவட்ட மைய நூலகம் மூலம் கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற இலவச பயிற்சி மாதிரி தேர்வுகள் மூலம் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உதவித்தொகை பெற்றுவருவது நம் மாவட்டத்திற்கும் தென்காசி நூலகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இதற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் மாரியப்பன், முதன்மை முதல் நிலை நூலகர் முனியப்பன், ஆய்வாளர் சண்முகசுந்தரம், நூலகர்கள் பிரம நாயகம், சுந்தர், ஜூலியாராஜ செல்வி, நிஹ்மதுனிஸா, வாசகர் வட்ட குழந்தைஜேசு, முருகேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!