
ராமநாதபுரத்தில் நடந்தஆசிரியர் தின விழாவில் 2 தலைமை ஆசிரியை, ஒரு தலைமை ஆசிரியை உள்பட 9 பேருக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கே.ஜே.பிரவீன் குமார், டாக்டர். ராதாகிருஷ்ணன்விருதுவழங்கினார்.
ராமநாதபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்காதர்பாட்சாமுத்துராமலிங்கம்,பரமக்குடிசட்டமன்றஉறுப்பினர்செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2021-ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதை, பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்ரவி, ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (வரலாறு)சந்தான கிருஷ்ணன்,திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)ஆல்பர்ட் மனோகரன்,பரமக்குடி (கலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியைநிர்மலாதேவி,மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாணி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்பரமேஸ்வரன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சுமைதாங்கி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைடார்த்தி கரோலின்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் புதூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்செங்கோல் திரவியம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் க.கொடிக்குளம் தொடக்கப்பள்ளிதலைமைஆசிரியைமுனீஸ்வரி,ராமநாதபுரம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கல்வி துறையின் பாராட்டு சான்று, வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றைகூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கே.ஜே.பிரவீன் குமார் வழங்கி னார். மேலும் பயனாளிகள் பேருக்கு ரூ.64.50 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமுதல்வர் மு.புனிதம், மாவட்ட கல்வி அலுவலர்கள்கோ.முத்துசாமி,(ராமநாதபுரம்)மு.முருகம்மாள், (மண்டபம்) மு.சேதுராமு, (பரமக்குடி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.