
தென்மண்டல அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கீழக்கரையை சேர்ந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த காளிதாஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் மூர் அசனுதீன், போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க தலைவர் அருள் ஆடும் பெருமாள், பொறியாளர் முரளி, வழக்கறிஞர் காளீஸ்வரன், ரியல் எஸ்டேட் செல்வவிநாயகம், கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்தனர். யோகா அகாடமியின் பயிற்சி ஆசிரியர் நாகூர் கனி விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
You must be logged in to post a comment.