
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தான் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பிரம்படி கொடுத்த வாழ்த்து பெற்ற முன்னாள் மாணவர்கள்.மதுரை செல்லூர் அருகே உள்ளது மனோகரா நடுநிலைப் பள்ளி. இது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்தப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் பால் ஜெயக்குமார்.அவரது நீண்ட நெடுங்கால கல்வி சேவையை பாராட்டும் வகைமில் அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கரபாண்டியன் அபூபக்கர் சித்திக் அலெக்ஸ் சரவணன் ஆனந்த் கார்த்திக் தினேஷ் ஆகியோர் தங்களது ஆசிரியருக்கு கேடயம் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் கூறுகையில், மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் பிரம்பு கொண்டு தண்டிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் மனித உரிமை குழந்தைகள் உரிமை என பேசுகின்ற நிலை வந்துவிட்டது. அப்போதிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டிப்பு காட்டினார்கள். இன்று எங்களது முன்னாள் தலைமை ஆசிரியரை சந்தித்தபோது கையோடு நாங்கள் கொண்டு சென்ற பிரம்பால் அடி வாங்கி மகிழ்ச்சி அடைந்தோம். ஏனெனில் ஆசிரியர்களின் கண்டிப்பு தான் மாணவர்களை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை நாங்கள் முழுவதுமாக உணர்ந்து இருக்கிறோம்.முன்பெல்லாம் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள மூங்கில் கடைத்தெருவில் வாத்தியார் பிரம்பு என்றே விற்பனையாகும். இன்றைக்கு அந்த பிரம்பு விற்பனை நலிந்து போய் வாங்குவதற்கு ஆளின்றி கிடப்பதாக மூங்கில் கடைக்காரர்கள் எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டனர். உங்களைப் போன்ற அந்தகால மாணவர்களை நல்வழிப் படுத்திய பிரம்புக்கும் நாங்கள் செய்த மரியாதையாக கருதுகிறோம் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.