
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நலச் சங்கத்தின் துவக்க விழா தலைவர் சையது பாரூக் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது செயலாளர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கம் அனைத்து வணிகர் சங்க செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ஆசை முஷிர் , சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மெஹபூப் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் கூட்டமைப்பில் மாநில பொதுச்செயலாளர் காரைக்குடி சக்தி மற்றும் மாநில பொருளாளர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள், குறித்தும் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக பேசினார். அவர்கள் பேசுகையில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் திருவண்ணாமலை நகர இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்க நிர்வாகிகள், புதிய வாகன விற்பனையாளர்கள், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளர்கள், லேத் பட்டறை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, மூன்றிலிருந்து ஐந்து லட்சம் வரை வரை விபத்து காப்பீடு, அரசு அனைத்து வகையான சலுகைகள், உதவித்தொகை குறித்து விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விழாவில் பாரதப் பிரதமர் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தேர்வு எழுதியவர்களுக்கு சங்கத்தின் தலைவர் பாரூக் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் முன்னாள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணி நன்றி கூறினார்
You must be logged in to post a comment.