Home செய்திகள் இந்திய கபடி அணியில் ராமநாதபுரம் வீரர்கள்நேபாளுடன் இறுதி ஆட்டம்தங்கம் வென்று சாதனை.

இந்திய கபடி அணியில் ராமநாதபுரம் வீரர்கள்நேபாளுடன் இறுதி ஆட்டம்தங்கம் வென்று சாதனை.

by mohan

இன்டர்நேஷனல்யூத் ரூரல் கேம் அண்ட் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன், யூத் ரூரல் கேம் அண்ட் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன்ஆப் இந்தியா சார்பில் இந்தியா-நேபாள் 7வது ஊரக விளையாட்டு போட்டிகள் நேபாள் பொகாரா என்னும் இடத்தில் டிச.21 முதல் 24 வரை நடந்தன. தனித்திறன் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 19 வயதிற்கு உட்பட்டோர் கபடி போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியா அணி 60:30 என்ற புள்ளி கணக்கில் நேபாள் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணியில் தமிழக வீரர்களாக பொறியியல் மாணவர் எஸ்.திவாகர் (ராமநாதபுரம்- இந்திரா நகர்), என்.டார்வின், எஸ்.சதீஷ் குமார்,எஸ்.மாதேஷ், எம்.ரஞ்சித் குமார், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் எஸ்.அப்துஸ் ஷஹீத் (ராமநாதபுரம்- இந்திரா நகர்),எஸ்.புவனேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தியாவிற்கு வெற்றி தேடி தந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ராமநாதபுரம் வீரர்களை நான் ஸ்டாப் கூரியர் நிர்வாக இயக்குநர் கே. செய்யது அன்வர், சினிமா இயக்குநர் எஸ்.மோகன் பாத செல்வம் உள்பட பலர் பாராட்டினர். இவர்களில் ராமநாதபுரம் வீரர்கள் எஸ்.திவாகர், எஸ்அப்துல் ஷஹீத் ஆகியோர் பிட் இந்தியா மற்றும் நேஷனல் ரூரல் யூத் கேம்ஸ் சார்பில் 2020 நவ.20 முதல் நவ.23 வரை கோவாவில் நடந்த தேசிய கபடி போட்டி இறுதி ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீரை வென்ற தமிழக கபடி அணியில் இடம் பெற்றிருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com